BREAKING NEWS
latest

Saturday, September 14, 2019

அமீரக குற்ற செயல்கள் மற்றும் சட்டத்தை மீறுவது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்து குற்றமாகும்:

அமீரக குற்ற செயல்கள் மற்றும் சட்டத்தை மீறுவது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்து குற்றமாகும்:

அமீரகத்தின் சட்டப்படி குற்ற செயல்கள் மற்றும் சட்டத்தை மீறுவது தொடர்பான வீடியோகள் மற்றும்  புகைப்படங்கள் அதிகாரிகள் அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்து கடுமையான குற்றமாகும் என்று பாதுகாப்பு துறை அதிகாரி ஜெனரல் Hamad Saif Al Shamsi தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் குற்றங்கள் மற்றும் அமீரகத்தின் சட்டதிட்டங்களை மீறுவது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பரவுவது அதிகாரிகள் கவனத்திற்கு வந்துள்ளது நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பெரும் தொகை அபராதமும் மற்றும் பல வருடங்கள் சிறை தண்டனை உள்ளிட்டவை கிடைக்கும் அளவுக்கு பெரிய குற்றமாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சமூக நலனை கருத்தில் கொண்டு இப்படிபட்ட வீடியோகள் மற்றும் புகைப்படங்களை சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிக்கு புகார் செய்ய பொதுமக்கள் தாராளமாக பதிவு செய்யலாம், ஆனால் சம்மந்தப்பட்ட துறையின் அனுமதி அல்லது சட்டத்திற்கு உட்பட்டு அதை பதிவு செய்வதில் தவறு இல்லை என்று தெளிவு பெற்று அனுமதியுடன் மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சமூகம் வலைதளங்களில் ஒரு வீடியோ அல்லது புகைப்படங்கள் பதிவு செய்யும்போது அதில் குற்றம் செய்த நபர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் ஆகியோரின் முகங்கள் தெளிவான தெரிகிறது. இது வீடியோ எடுத்த நபர், பொது தளத்தில் பதிவு செய்த நபர் மற்றும்  பகிர்வு செய்ய நபர்கள் ஆகியோரை குற்றவாளிகள் ஆகும். இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றம் குற்றவாளியை கண்டறிந்து அறிவிக்கும் முன்னர் நீங்களே ஒருவரை குற்றவாளியாக தீர்மானித்து பதிவுகள் செய்வது பெரிய குற்றமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும், தனிப்பட்ட நபரின் அமைதியான வாழ்க்கை பாதிக்கும், மேலும் விசாரணையும் பதிக்கும் விதத்திலும் உள்ள வீடியோகள் மற்றும் புகைப்படங்கள் பரப்பக்கூடாது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.


Reporting by Kuwait tamil pasanga Team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரக குற்ற செயல்கள் மற்றும் சட்டத்தை மீறுவது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்து குற்றமாகும்:

« PREV
NEXT »