BREAKING NEWS
latest

Saturday, August 3, 2019

குவைத் தமிழக இளைஞர் உட்பட இருவர் விபத்தில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது:

குவைத் தமிழக இளைஞர் உட்பட இருவர் விபத்தில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது:

குவைத்தின் அர்தியா(Ardiya)பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் உட்பட இருவர் சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி இன்று வெளியாகியுள்ளது.

அவர் பெயர் அன்புராஜ்(வயது-26) எனவும்,தந்தை பெயர் அன்பழகன் என்பதும் தெரியவந்துள்ளது.குவைத்தின் பார்வானியா பகுதியில் நடந்த விபத்தில் மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அன்புராஜ் நாகபட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை சீனிவாசபுரம் காந்திஜி சாலையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை முடித்துக்கொண்டு அன்புராஜ் மற்றும் அவருடன் வேலை செய்யும் இன்னொரு நபரும்(எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்) இருவரும் பைக்கில் அறைக்கு திரும்பும் வழியில் வேகமாக வந்த லாரி மோதியதில் பார்வானியா( Farwaniya) என்ற பகுதியில் வைத்து இருவரும் சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அன்புராஜுக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளது.மனைவிக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.சிறு வயதிலேயே திருமணம் முடித்துள்ளார்‌ என்பது தெரியவந்துள்ளது.குவைத்திற்கு வேலைக்கு வந்த வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.





















WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் தமிழக இளைஞர் உட்பட இருவர் விபத்தில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »