BREAKING NEWS
latest

Thursday, August 8, 2019

குவைத்தில் மனைவி,குழந்தைகளுக்கு 3 மாதமும்;பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு 30 நாட்களுக்கு விசா மட்டுமே வழங்க உத்தரவு:


குவைத்தில் மனைவி, குழந்தைகளுக்கு 3 மாதமும்; பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு 30 நாட்களுக்கு விசா மட்டுமே  வழங்க உத்தரவு:

குவைத் குடிநுழைவு துறை அமைச்சகம்
மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் 3 மாத விசிட்டிங் விசாவும்,பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகள் 30 நாட்கள் மட்டுமே விசிட்டிங் விசா வழங்க வேண்டுமென்று
குவைத்தின் 6 Governorates (மாகாணங்களில்) யில் உள்ள குடிநுழைவு துறை அலுவலகங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக பிரபல குவைத் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் பெற்றோர்கள் மற்றும்  உடன்பிறப்புக்கு விசிட்டிங் விசா 30 நாட்களுக்கு மட்டுமே வழக்க வரையறுக்கப்பட்ட புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குவைத்திற்கு வருகைதரும் வணிகர்களுக்கும் மற்றும்
முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அல்-அன்பா தினசரி பத்திரிகை தெரிவிக்கிறது. விசிட்டிங் விசாக்களில் விதிவிலக்குகளுக்கு இடமில்லை என்று பாதுகாப்பு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் பெற்றோர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் மூன்று மாதங்களுக்கு விசிட்டிங்
விசா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மனைவி குழந்தைகளை விசிட்டிங் விசாவில் அழைத்துவர தற்போதுள்ள விதிமுறைகளின்படி 250 தினார்கள் சம்பளம் வேண்டும். உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மனைவியின் பெற்றோரையும் அழைத்துவர  500 தினார்கள் சம்பளம் வேண்டும்.

(Sponsor)அதாவது அழைத்துவரும் நபரான உங்கள் வேலை,சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலும்,குவைத்திற்கு வரும் நபரின் பயணத்தின் நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் விசா காலாவதியை குறைக்க எமிக்கிரேசன் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.



Reporting by:Kuwait tamil pasanga Team


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மனைவி,குழந்தைகளுக்கு 3 மாதமும்;பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு 30 நாட்களுக்கு விசா மட்டுமே வழங்க உத்தரவு:

« PREV
NEXT »