BREAKING NEWS
latest

Friday, July 12, 2019

துபாய் கடந்த மாதம் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியான பேருந்து விபத்தின் தீர்ப்பு இன்று வெளியாது:


துபாய் கடந்த மாதம் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியான பேருந்து விபத்தின் தீர்ப்பு இன்று வெளியாது:

துபாயில் சமீபத்தில் (06/06/2019) நடந்த பேருந்து விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 17 பேர் இறந்தது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இவ்விபத்தின் வழக்கு துபாய் நீதி மன்றத்தில் நடந்து வந்தது.

நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியானது.அதன்படி இக்கோர விபத்துக்கு காரணமான 53 வயதான ஓமானி ஓட்டுனர் குற்றவாளி எனவும் அவருக்கு 7 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.சிறை தண்டனைக்கு பிறகு அவர் நாடு கடத்தப்படுவார்.

மேலும் விபத்தில் இறந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரணத் தொகையாக (Blood Money) திர்ஹம் 200,000/-  (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.விபத்து நடந்த 1 மாதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது .

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாய் கடந்த மாதம் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியான பேருந்து விபத்தின் தீர்ப்பு இன்று வெளியாது:

« PREV
NEXT »