குவைத்தில் நேற்று முன்தினம் விமான நிலையத்திற்கு வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை ஒருவர் கடத்திச் சென்று கற்பழித்த பிறகு மீண்டும் விமான நிலையத்தில் விட்டார் என்று அந்த பெண்ணின் முதலாளி ( Sponsor) காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து குவைத்தின்
Jleeb Al-Shuyoukh காவல்துறை துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர். இதையடுத்து விமான நிலையத்தில் அந்த பெண்ணை கடத்தியதாக கூறப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த காட்சியை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரிகள் காட்டினார் அதில் தன்னை கடத்திய நபரை அந்த பெண் அடையாளம் காட்டினார்.இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த பெண்ணை கடத்தி நபர் விமான நிலைய போலீஸ் அதிகாரி. இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணைக்கு சம்மந்தப்பட்ட துறையினரிடம் அந்த நபரை அதிகாரிகள் ஒப்படைத்தனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அந்த பணிப்பெண்ப போலீசாருக்கு கொடுத்துள்ள வாக்குமூலத்தில் அந்த பெண்ணை புதிதாக வந்தால் ஆவணங்கள் உள்ளிட்டவை சரிசெய்ய வேண்டும் என்று அழைத்து சென்று ஆளில்லா இடத்திற்கு சென்றதும் தன்னை அந்த நபர் கற்பழித்தார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது
Report by Kuwait tamil pasanga team



