BREAKING NEWS
latest

Monday, June 10, 2019

குவைத்தில் 2017 யில் இருந்த யாரும் மறந்திருக்க முடியாத நிகழ்வு......நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது:

குவைத்தில் 2017 யில் இருந்த யாரும் மறந்திருக்க முடியாத நிகழ்வு......நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது:
குவைத்தில் இரு வருடங்களுக்கு (2017) முன்பு மார்ச் மாதத்தில் எத்தோப்பியா நாட்டைச் சேர்ந்த குவைத்தில் வேலைக்கு வந்த பணிப்பெண் ஒருவர் 7-வது மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் அந்த நேரத்தில் இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.
               இதில் அந்த பெண்மணி கீழே விழும்போது கட்டிடத்தின் அருகில் உள்ள இன்னொரு குடியிருப்பின் மேல் விழுந்தது படுகாயத்துடன் உயிர் தப்பினார்.இவரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
          குறைந்தது 6 மாதங்கள் சிகிச்சை பிறகு அந்த பெண்மணி தாயகம் சென்றார். இந்நிலையில் கடந்த வருடம் திருமணம் முடிந்து தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. இந்த வழக்கில் அந்த பெண்மணி கீழே குதிக்க முயற்சி செய்யும் போது அந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் இருந்த கம்பியில் சிறு நேரம் தொங்கியபடி பிறகு கீழே குதித்தார்.
              இதை அதன் முதலாளி(Female Citizen) பெண்மணி வீடியோ எடுத்தார் இந்த வீடியோ தான் வைரலாக பரவிய வீடியோ காட்சிகள். இதையடுத்து அந்த பெண்மணிக்கு குவைத் நீதிமன்றம் 20 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 900 குவைத் தினார் அந்த எத்தனையோ பெண்மணிக்கு வழங்க வேண்டும் என்று அபராதம் விதித்து
தீர்ப்பு வழங்கியுள்ளது.
      சில மாதங்களுக்கு முன்பு இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நேற்று இது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Report by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 2017 யில் இருந்த யாரும் மறந்திருக்க முடியாத நிகழ்வு......நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது:

« PREV
NEXT »