BREAKING NEWS
latest

Tuesday, June 25, 2019

குவைத்தில் பணிப்பெண் கடுமையாக தாக்கப்பட்ட கொடுரமான சம்பவம் நடந்தேறியுள்ளது:


குவைத்தில் பணிப்பெண் கடுமையாக தாக்கப்பட்ட கொடுரமான சம்பவம் நடந்தேறியுள்ளது:

            குவைத்தில் பணிப்பெண் கடுமையாக தாக்கப்பட்ட கொடுரமான காட்சிகள் வெளியாகியுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி Jessielyn Espanola(வயது-49) கடந்த 11 வருடங்களாக ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
            இந்நிலையில் அந்த பெண்மணி முதலாளி வீட்டில் நகையை திருடியதாக அவருடைய மகன் கொடுரமாக தாக்கப்பட்ட நிலையில் உதவி கேட்டு காகிதம் ஒன்றில் எழுதி கடிதம் வைரலாகி அந்த பெண்மணியை பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் குவைத் காவல்துறையினர் உதவியுடன் மீட்டனர்.
           கடந்த 11 வருடங்களாக நான் வளர்த்த பையன் இப்படி என்னை அடிப்பான் என்று நான் நினைக்கவில்லை என்றும்,நான் அதை எடுக்கவில்லை என்று எவ்வளவு கூறியும் நம்பவில்லை என்றும் தொடர்ந்து கடுமையாக தாக்கினார் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
          கடந்த 2018 ஆம் பிலிப்பைன்ஸ் அரசு குவைத் அரசுடன் ஒப்பந்தம் தொடர்பாக பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையிலும் தொழிலாளர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகிய வண்ணம் உள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பணிப்பெண் கடுமையாக தாக்கப்பட்ட கொடுரமான சம்பவம் நடந்தேறியுள்ளது:

« PREV
NEXT »