BREAKING NEWS
latest

Tuesday, June 25, 2019

குவைத் குற்றவியல் நீதிமன்றம் நேற்று 9-வயது மகளை கற்பழித்த வழக்கில் தந்தைக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு:


குவைத் குற்றவியல் நீதிமன்றம் நேற்று 9-வயது மகளை கற்பழித்த வழக்கில் தந்தைக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது:

குவைத்தில் வசித்து வந்த பிலிப்பைன்ஸ் மனைவிக்கும்,பங்களாதேஷ் கணவனுக்கு பிறந்த (வயது-9) குழந்தையை கற்பழித்த வழக்கில் கணவனுக்கு குவைத் குற்றவியல் நீதிமன்றம் நேற்று மரணதண்டனை(தூக்கு தண்டனை) விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியின் புகார் அடிப்படையில் சம்மந்தப்ட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.முதலில் வழக்குபதிவு செய்த தாய் பிறகு வழக்கைத் திரும்பப் பெறவும்,நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார். இதை நீதிமன்றம் நிராகரித்தது,இந்த வகையான வழக்குகளில் நீதிமன்றம் எந்த கருணையும் அளிக்காது தெரிவித்தது.

மேலும் குற்றவியல் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது.அதாவது
விசாரணையின் போது பாதிக்கப்பட்ட குழந்தை தனது தந்தையால் துன்புறுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டார், பிரச்சினை  நடந்த அதே நாளில் மட்டும் தந்தையால் இரண்டு முறை துன்புறுத்தப்பட்டதாவும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.அந்த குழந்தைக்கு 4 வயது இருக்கும் போது அந்த குழந்தையுடன் இவன் உடலுறவு வைக்க தொடங்கினான் என்ற அதிர்ச்சி  தகவலும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நேற்று இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு விசாரணைகள் நீதிமன்றத்தில் முடிந்த நிலையில் குற்றவாளிக்கு குற்றவியல் நீதிமன்றம் மரணதண்டனை (தூக்குதண்டனை) விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னர் தடயவியல் அறிக்கையில் குற்றவாளியின்(தந்தை) டி.என்.ஏ  குழந்தையின் மாதிரிகளுடன்
பொருந்தியது என்பதை உறுதிப்படுத்தியது.  மேலும்,இந்த வழக்கு குற்றவியல் பிரிவுக்கு மாற்றுவதற்கு முன்பு குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Reporting by Kuwait tamil pasanga team.




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் குற்றவியல் நீதிமன்றம் நேற்று 9-வயது மகளை கற்பழித்த வழக்கில் தந்தைக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு:

« PREV
NEXT »