BREAKING NEWS
latest

Tuesday, June 11, 2019

குவைத்தில் கடந்த 6 மாதங்களில் 10000-ற்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் கடந்த 6 மாதங்களில் 10000-ற்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் கடந்த 6 மாதங்களில் 10000-ற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விசா காலம் முடிந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த மற்றும் சட்டத்தை மீறிய வழக்குகளில் சிக்கிய நபர்கள் இதில் அடங்குவார்கள்.
          மேலும் இந்த ரமலான் மாதத்தில் பிச்சையெடுத்த 50 நபர்களுக்கும் இந்த நாடுகடத்தப்பட்ட நபர்கள் பட்டியலில் அடங்கும். ரம்லான் மாதத்தில் மட்டும் 370-ற்கும் மேற்பட்ட நபர்கள கைது செய்யப்பட்டனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
         குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 4 மாதத்தில் 4500 நபர்களும், மே 1 ற்கு பிறகு 5500 நபர்களுக்கும் நாடுகடத்தப்பட்டனர். நாடுகடத்தல் நடவடிக்கைகள் இவ்வளவு விரிவாக நடைபெற்ற முக்கியமான காரணம் கைது செய்யப்பட்டும் நபர்கள் தக்கவைக்படும் கட்டிடங்களில் உள்ள இடம் பற்றாக்குறை என்று தெரிகிறது.
      கடந்த காலங்களை ஒப்பிடுகையில் நாடுகடத்தல் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாடுகடத்தப்பட்ட நபர்கள் இனிமேல் குவைத் வரமுடியாது படி விரல் அடையாளம் வைத்து கருப்பட்டியில் சேர்க்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
           இதைத்தவிர ரம்லான் மாதத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் அரசின் அறிவிப்பை மீறியும் பிச்சையெடுக்கும் வேலை செய்த 50 நபரும் நாடுகடத்தப்பட்ட நபர்களில் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் 17,000 நபர்களும்,2016 19,730 நபர்களையும்,2017 யில் 29,000 ற்கு மேற்பட்ட நபர்களும் நாடுகடத்தப்பட்ட நபர்களில் அடங்குவார்கள்.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கடந்த 6 மாதங்களில் 10000-ற்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »