BREAKING NEWS
latest

Monday, July 1, 2019

குவைத்தில் இந்த வருட இஸ்லாமிய புத்தாண்டு ஆகஸ்ட்-31;அரசு விடுமுறையாக இருக்கும்:


குவைத்தில் இந்த வருட இஸ்லாமிய புத்தாண்டு ஆகஸ்ட்-31;அரசு விடுமுறையாக இருக்கும்:

குவைத்தில் இந்த வருட இஸ்லாமிய புத்தாண்டு ஆகஸ்ட் 31 சனிக்கிழமை அன்று இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு Al-Anba தினசரி நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் விடுமுறைகள் குறித்து அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,சனிக்கிழமையன்று ஏதேனும் பொது விடுமுறைகள் வந்தால், அது ஒரு பொது விடுமுறையாக கருதப்படும், மேலும் மற்றொரு நாள் கூடுதலாக விடுமுறை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்லாமிய புத்தாண்டுக்கான விடுமுறை அந்த நாளில் வழங்கப்படும் என்றும்,மற்றொரு நாள் விடுமுறை அறிவிக்காது என்று அமைச்சரவை மற்றொரு முடிவை வெளியிட்டுள்ளது.இதை சிவில் சர்வீஸ் கமிஷன் உத்தரவின் 82 வது பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்த வருட இஸ்லாமிய புத்தாண்டு ஆகஸ்ட்-31;அரசு விடுமுறையாக இருக்கும்:

« PREV
NEXT »