BREAKING NEWS
latest

Tuesday, June 4, 2019

அமீரகத்தின் அபுதாபியில் இந்தியருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.18 கோடி குலுக்கல் பரிசு விழுந்துள்ளது:


அமீரகத்தின் அபுதாபியில் இந்தியருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.18 கோடி குலுக்கல் பரிசு விழுந்துள்ளது:

ஐக்கிய அமீரகத்தில் நடந்த மாதாந்திர பரிசு சீட்டு குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு 18 கோடி ரூபாய் பரிசுதொகை விழுந்துள்ளது என்று மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது
         அபுதாபியில் இயங்கி வரும் பிக்-டிக்கெட் என்ற நிறுவனம் மாதாந்திர குலுக்கல் நடத்தி விலையுயர்ந்த கார் மற்றும் பணத்தை பரிசு தொகையாக வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த நிறுவனம் நடத்திய ஜூன்,2019 மாத குலுக்கலில், கேரளாவை சேர்ந்த சஞ்சய் நாத் என்பவர்,டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
           இதில் யாரும் எதிர்பாராத விதமாக அவருக்கு 10 மில்லியன் திராம்(Dhiram) அதாவது இந்திய மதிப்பில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
            இதேபோல் மேலும் 5 இந்தியர்கள் இந்த குலுக்கலில், முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். குலுக்கலில் பரிசு பெற்ற  இளைஞர் சஞ்சய் நாத், பணத்தை குடும்பத்துக்கும், ஏழை, எளிய மக்கள் நலனுக்கும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர் சந்திப்பில் நெகிழ்வு தெரிவித்துள்ளார்.

Report by Kuwait tamil pasanga team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தின் அபுதாபியில் இந்தியருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.18 கோடி குலுக்கல் பரிசு விழுந்துள்ளது:

« PREV
NEXT »