BREAKING NEWS
latest

Tuesday, May 21, 2019

குவைத்தில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய சோகமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தின் Jleeb பகுதியில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று குப்பைத் தொட்டியில் வீசிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ள துயரமான செய்தி வெளியிட்டுள்ளது.
             தகவல் கிடைத்தது விரைந்து வந்த மருத்துவ குழுவினர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக Farwaniya மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை தற்போது முழு உடல்நலத்துடன் உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.


           இது குறித்து வழக்குப் பதிவு செய்து இந்த குழந்தையின் பெற்றோரை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த குழந்தை சட்டத்திற்கு புறம்பாக பிறந்த குழந்தையாக சில நேரங்களில் இருக்கலாம்.வளைகுடா நாடுகளில் தவறான வழியில் குழந்தை பெற்றுக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

                இந்த காரணத்தால் கூட குழந்தை குப்பைத் தொட்டியில் பெற்ற பெண்மணி வீசியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Report by Kuwait tamil pasanga team.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய சோகமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »