BREAKING NEWS
latest

Saturday, September 14, 2024

சவுதியில் ஒரு கம்பெனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது

புதிய தீர்மானம் ஊழியர்களுக்கு புத்துணர்வு வழங்குவதுடன் கம்பெனியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்

Image : கம்பெனி ஊழியர்களில் சிலர்

சவுதியில் ஒரு கம்பெனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

சவுதியின் ரியாத்தை தளமாகக் கொண்ட முன்னணி AI வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை தளமான லூசிடியா, தனது பணி அட்டவணையில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது, சவுதி அரேபியாவில் வாரத்தில் நான்கு நாள் வேலை என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தும் முதல் நிறுவனமாக இது மாறியுள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி பல்வேறுபட்ட விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. வரும் தினத்தில் மற்ற பல கம்பெனிகளும் இதே முடிவுக்கு வருமா என்று பல ஊழியர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர். சாதாரண முறையில் சவுதியில் 5 அல்லது 6 நாட்கள் வாரத்தில் பெரும்பாலான சவுதி கம்பெனியில் வேலை தினங்களாக உள்ளது.

புதிய தீர்மானம் ஊழியர்களுக்கு புத்துணர்வு வழங்குவதுடன் கம்பெனியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் நம்புவதாக நாட்டின் பிரபலமான மனித உரிமை ஆராய்ச்சி நிபுணர் கலீல் அல் தியாபி கருத்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் ஒரு கம்பெனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »