BREAKING NEWS
latest

Friday, February 18, 2022

குவைத்தில் பிப்ரவரி-20 முதல் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினரும் நுழைய அனுமதி வழங்கப்படும் என்ற திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளன

குவைத்தில் பிப்ரவரி-20 முதல் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினரும் நுழைய அனுமதி வழங்கப்படும் என்ற திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளன

Image credit: Kuwait Airport

குவைத்தில் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினரும் நுழைய அனுமதி வழங்கும் திருத்தப்பட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளன

குவைத்துக்குள் தடுப்பூசி போடாத வெளிநாட்டினரும் நுழையலாம் என சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். அமைச்சரவையால் கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி குவைத் அனுமதி வழங்கியுள்ள கோவிட் தடுப்பூசி போடாத வெளிநாட்டினரும் குவைத்துக்குள் நுழையலாம் என குவைத் சிவில் ஏவியேஷன் சற்றுமுன்(18/02/2022) வெள்ளிக்கிழமை திருத்தப்பட்ட இறுதியான புதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்களும் குவைத்துக்குள் நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில். நேற்று(17/02/2022) வியாழக்கிழமை திடிரென கோவிட் தடுப்பூசி போடாத குவைத் குடிமக்கள் மட்டுமே நுழைய அனுமதி என்று திருத்திய அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதனா‌ல் குவைத் நுழைய ஆவலுடன் காத்திருந்த வெளிநாட்டினர் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்ட அறிவிப்பே தற்போது மீண்டும் ரத்து செய்துள்ளது.

எனவே இன்று மாலையில் வெளியிடப்பட்ட மிகவும் புதிய அறிவிப்பின்படி தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினர் மீண்டும் நுழையலாம் என்ற வாசல் திறந்துள்ளது. ஆனால் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினர் குவைத்தில் நுழைய 72 மணி நேரத்திற்குள் செல்லுபடியாகும் எதிர்மறை(Negative) எடுத்துவர வேண்டும். மற்றும் குவைத்திற்கு வந்தவுடன் 7 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும். இந்த முடிவு பிப்ரவரி-20,2022 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 00:01 மணி முதல் அமலுக்கு வரும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பிப்ரவரி-20 முதல் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினரும் நுழைய அனுமதி வழங்கப்படும் என்ற திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளன

« PREV
NEXT »