BREAKING NEWS
latest

Monday, December 6, 2021

குவைத்தில் விசா ஒரு முதலாளியிடம் பெற்று,அதை பயன்படுத்தி தொழிலாளர்கள் சட்டத்தை மீறி வேறு நபர்களிடம்(Sponsore) வேலை செய்கின்ற வெளிநாட்டினரைக் கண்டறியும் கடுமையான பரிசோதனைகள் மீண்டும் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

குவைத்தில் விசா ஒருவரிடம் பெற்று மற்றொரு முதலாளியின் கீழ் வேலை செய்கின்ற நபர்களை கண்டறியும் பரிசோதனை தீவிரப்படுத்த முடிவு

Image : உள்துறை அதிகாரிகள் பரிசோதனை

குவைத்தில் விசா ஒரு முதலாளியிடம் பெற்று,அதை பயன்படுத்தி தொழிலாளர்கள் சட்டத்தை மீறி வேறு நபர்களிடம்(Sponsore) வேலை செய்கின்ற வெளிநாட்டினரைக் கண்டறியும் கடுமையான பரிசோதனைகள் மீண்டும் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

இது தொடர்பாக வெளியாகியுள்ள விரிவான அறிக்கையில் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் குடியிருப்பு அனுமதி சட்டத்தை மீறும் வெளிநாட்டு தொழிலாளர்களைக் கண்டறியும் சோதனைகளை மேற்கொள்ளும் அரசின் உள்துறை, குடியிருப்பு துறை, நகராட்சி குழுக்கள் மீண்டும் தங்கள் பணியைத் தொடங்கியுள்ளன. நாட்டில் பரிசோதனைகளை கடுமையாக்குதல் மற்றும் சட்டத்தை மீறுபவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு Sponsore-யின் கீழ் விசா பதிவுசெய்யப்பட்ட ஒருவர் அதே நேரத்தில் மற்ற பல முதலாளிகளின் கீழ் அதிகளவில் வேலை செய்வதாக உள்ளூர் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் கைது செய்யப்படும் நபர்களை தங்க வைக்கின்ற நாடு கடத்தல் மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த இரண்டு மாதங்களாக இதுபோன்ற பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் அவர்களை அதிகாரிகள் தங்களுடைய தாய் நாடுகளுக்கு நாடுகடத்திய நிலையில், சிறிய இடைவேளைக்குப் பிறகு பரிசோதனைகள் நடத்த தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொண்டுள்ளனர்.

மனிதவள பாதுகாப்பு விவகாரங்களின் துணை இயக்குநர் டாக்டர். முபாரக் அல்-அஸ்மி அவர்கள் நாடு முழுவதும் பரிசோதனைகளை மீண்டும் தொடங்குமாறு தொழிலாளர் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பரிசோதனை நடவடிக்கைகள் ஜிலிப் அல்-ஷுயூக் மற்றும் ஷுவைக் Industrial Area போன்ற நாட்டின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கடுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் விசா ஒரு முதலாளியிடம் பெற்று,அதை பயன்படுத்தி தொழிலாளர்கள் சட்டத்தை மீறி வேறு நபர்களிடம்(Sponsore) வேலை செய்கின்ற வெளிநாட்டினரைக் கண்டறியும் கடுமையான பரிசோதனைகள் மீண்டும் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

« PREV
NEXT »