BREAKING NEWS
latest

Tuesday, October 12, 2021

குவைத்தில் பல்வேறுபட்ட காரணங்களால் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு

Image : கைது நடவடிக்கை போது எடுக்கப்பட்ட புகைப்படம்

குவைத்தில் பல்வேறுபட்ட காரணங்களால் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் காலவரையின்றி இடைநிறுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக உள்துறை அமைச்சக தலைமையகம் காவல்துறை அதிகாரிகள் வாய்மொழி வழியான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் சிறைகள் மற்றும் நாடுகடத்தல் மையங்கள் கடந்த சில நாட்களாக இதுவரையில் கைது செய்யப்பட்ட நபர்களை கொண்டு நிரம்பியுள்ள நிலையில் இட தட்டுப்பாடு மற்றும் குறைவான விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்ற நிலையில் இவர்களை தங்கள் நாடுகளு‌க்கு திருப்பி அனுப்ப விமானங்களில் இருக்கைகள் இல்லாததும் பெரும் பிரச்னையாக உள்ளது.

மேலும் சிறைகளில் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் முதல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள நபர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளைத் எடுத்து வருகின்றனர். மேலும் இப்படி கைது செய்யப்பட்ட பலருடைய பாஸ்போர்ட்டுகள் ஸ்பான்சர்களால் பறிக்கப்பட்டு அவர்களின் கையில் உள்ளது அல்லது கையில் இல்லை. இதன் காரணமாக, பலரை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்களை நாடு கடத்த புதிய வழியைக் கண்டுபிடிக்க அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பல்வேறுபட்ட காரணங்களால் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

« PREV
NEXT »