BREAKING NEWS
latest

Thursday, October 21, 2021

குவைத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய இளைஞர் படுகாயமடைந்தார்

குவைத்தின் Hawally சதுக்கத்தில் சாலையை கடக்க முயன்றதில் இந்தியர் ஒருவர் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார்

Image : விபத்து நடந்த இடம்

குவைத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய இளைஞர் படுகாயமடைந்தார்

குவைத்தின் Maidan Hawalli பகுதியில் வைத்து திடிரென சாலையை கடக்க ஓடியதில் விபத்தில் சிக்கிய இந்தியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்கா நாட்டவர் ஓட்டிய வாகனம் 33-வயதான இந்தியர் மீது ஏற்படுத்திய விபத்து குறித்து உள்துறை அமைச்சக அவசரகால உதவி மையத்திற்கு தகவல் கிடைத்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவ அவசர உதவி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர், காயமடைந்தவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய இளைஞர் படுகாயமடைந்தார்

« PREV
NEXT »