BREAKING NEWS
latest

Tuesday, September 7, 2021

பணியிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வருகின்ற இந்திய வீட்டுத் தொழிலாளர்களுக்கு தூதரக அதிகாரிகளின் உதவிகள் இனிமுதல் கிடைக்கும்

குவைத்திலுள்ள வீட்டுத் தொழிலாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வருகின்ற இந்தியர்களுக்கு தூதரக அதிகாரிகளின் சேவை கிடைக்கும்

Image : Indian Embassy Press Release

பணியிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வருகின்ற இந்திய வீட்டுத் தொழிலாளர்களுக்கு தூதரக அதிகாரிகளின் உதவிகள் இனிமுதல் கிடைக்கும்

குவைத்தில் வேலை செய்து வருகின்ற இந்திய வீட்டுத் தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வருகின்ற நேரத்தில் அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகளின் உதவிகள் இனிமுதல் கிடைக்கும். அரபு மொழியை நன்கு கையாளக்கூடிய அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் இன்று(07/09/21) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மனிதவளமேம்பாட்டு துறையின் கீழ் ரூமைத்தியாவில்(Rumaithiya) இயங்குகின்ற உள்நாட்டு வீட்டுத் தொழிலாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருகின்ற இந்திய வீட்டுத் தொழிலாளர்களுக்கு தூதரக அதிகாரிகளின் சேவை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கிடைக்கும். இது தவிர, இந்த நேரங்களில் அவர்களை 65501769 என்ற WhatsApp எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்திய தூதரகத்தின் இந்த புதிய முடிவு உள்நாட்டில் பணிபுரியும் பிரச்சனைகளை சந்திக்கும் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை விவரிக்க மொழி பிரச்சனை ஏற்ப்படும், இந்நிலையில் தூதரக அதிகாரிகளின் இந்த புதிய சேவை பல இந்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to பணியிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வருகின்ற இந்திய வீட்டுத் தொழிலாளர்களுக்கு தூதரக அதிகாரிகளின் உதவிகள் இனிமுதல் கிடைக்கும்

« PREV
NEXT »