BREAKING NEWS
latest

Thursday, July 15, 2021

இந்தியா திரும்பயிருந்த நிலையில் மாரடைப்பால் இந்தியர் உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்தியா திரும்புவதற்கான பயணச்சீட்டு எடுத்திருந்த நிலையில் சவுதியில் மாரடைப்பால் இந்தியர் உயிரிழந்தார்

Image : உயிரிழந்த சனீஷ்(வயது-38)

இந்தியா திரும்பயிருந்த நிலையில் மாரடைப்பால் இந்தியர் உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

சவுதி அரேபியாவில் வீடு திரும்பத் தயாரான இந்தியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு,சுனங்காடு பகுதியைச் சேர்ந்த சனீஷ்(வயது-38),இந்த மாதம் 22-ஆம் தேதி வீடு திரும்ப முடிவு செய்து விமான பயணச்சீட்டு எடுத்திருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, சனீஷ் அல் ஹசாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அவர் தங்கியிருந்த அறைக்கு மற்ற சக தொழிலாளர்கள் வேலை முடித்து சென்ற நிலையல் சனீஷ் தரையில் மயக்கத்தில் கிடந்ததைக் கண்டனர். அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் முன்னரே இறந்தார் எனவும், மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இவருக்கு திர்ஷியா என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். உடலை தாயகம் கொண்டுச் செல்ல நவாயகம் அறக்கட்டளை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியா திரும்பயிருந்த நிலையில் மாரடைப்பால் இந்தியர் உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

« PREV
NEXT »