BREAKING NEWS
latest

Sunday, July 18, 2021

குவைத் அமீர் நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

குவைத் அமீர் அவர்கள் சற்றுமுன் ஈத் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்

Image : குவைத் மன்னர் அவர்கள்

குவைத் அமீர் நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

குவைத் அமீர்(மன்னர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் இன்று(18/07/21) ஞாயிற்றுக்கிழமை சற்றுமுன் பக்ரீத் பண்டிகை(ஈத் அல் அதா) வாழ்த்துக்களை குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார், மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த பக்ரீத் பண்டிகையானது(ஈத் அல்-ஆதா) அன்பையும், மனநிறைவும் மற்றும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் ஒரு விருந்தாக அமையவும் அவர் வாழ்த்தியுள்ளார். அதேபோல் மகுட இளவரசர் மற்றும் பிரதம மந்திரி ஆகியோருக்கும் அமீர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு கடவுள் வழங்கியுள்ள இந்த தினம் மகிழ்ச்சியான விருந்தாக அமையட்டும் எனவும், இதே அமைதி மற்றும் பாதுகாப்பு முழு உலகிற்கும் கொண்டு வரும்படி சர்வவல்லமையுள்ள கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் குவைத்தையும் மற்றும் அதில் வசிக்கின்ற அனைத்து மக்களையும் தீன்மைகளிலிருந்தும், எதிர் வருகின்ற பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாத்து சிறந்த தலைமையின் கீழ் பாதுகாப்பாக முன்னேறி செல்ல முடியட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் அமீர் நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

« PREV
NEXT »