BREAKING NEWS
latest

Monday, July 5, 2021

இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கோவிட் பாதிப்பிலிருந்து விடுப்பட்டுள்ளார்;இன்று முதல் மீண்டும் வேலைக்கு திரும்பவுள்ளார் என்று தெரிகிறது

இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கோவிட் பாதிப்பிலிருந்து விடுப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வேலைக்கு திரும்பவுள்ளார்

Image : இந்திய தூதர் சிபி ஜார்ஜ்

இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கோவிட் பாதிப்பிலிருந்து விடுப்பட்டுள்ளார்;இன்று முதல் மீண்டும் வேலைக்கு திரும்பவுள்ளார் என்று தெரிகிறது

குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் கோவிட் நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார். இது தொடர்பான தகவலை அவர் தனது ட்விட்டர் கணக்கு மூலம் இன்று(05/07/21) திங்கள்கிழமை சற்றுமுன் வெளியிட்டார். கடந்த ஜூன் 25-ஆம் தேதி, கோவிட் மூலம் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கணக்கு மூலம் அவர் தெரிவித்திருந்தார், மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல் செய்யவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் காரணமான இந்திய தூதரகத்தின் சேவைகள் அனைத்தும் ஜூன்-1 வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் வீ்ட்டில் இருந்த படியே முக்கியமான அவசரகால தூதரக சேவைகளில் ஆன்லைன் வழியாக தொடர்ந்து ஈடுபட்டார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தூதர் தனது ட்விட்டர் பக்கம் வழியாக நன்றி தெரிவித்தார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கோவிட் பாதிப்பிலிருந்து விடுப்பட்டுள்ளார்;இன்று முதல் மீண்டும் வேலைக்கு திரும்பவுள்ளார் என்று தெரிகிறது

« PREV
NEXT »