BREAKING NEWS
latest

Sunday, July 11, 2021

குவைத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியரான Delivery ஊழியர் அடித்து கொல்லப்பட்ட துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் உள்ள X7 குழுமத்தில் Delivery ஊழியராக வேலை செய்துவந்த இந்தியரான 41-வயதான நபர் Abu Fatira பகுதியில் இன்று(11/07/21) ஞாயற்றுக்கிழமை தலையில் பலத்த அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் இந்தியர் இறந்து கிடந்த வீட்டில் உள்ள அவருடைய மகன் 159 தினார் மதிப்புமிக்க மின்சார ஸ்கூட்டர்(Electric Scooter) ஒன்றை Order செய்தார் எனவும்,அதை இந்தியர் எடுத்து சென்ற நிலையில் அதற்கான பணத்தை கொடுக்க மறுத்துள்ளான்,ஆனால் இந்திய ஊழியரோ பணம் செலுத்தினால் மட்டுமே தன்னால் திரும்பி செல்லமுடியும் என்று கூறியநிலையில், இளைஞன் இந்தியரை சரமாரியாக தலையில் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் தெரிகிறது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் தலைமறைவாக உள்ள குவைத்தியின் மகனை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கைது செய்தபிறகு அவனிடம் நடத்தபடும் விசாரணையில் கூடுதல் தகவல்கள் தெளிவாக தெரியவரும் என்று தெரிகிறது. இதையடுத்து தடயவியல் பரிசோதனைக்காக உயிரிழந்த இந்தியரின் உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே உயிரிழந்த இந்தியர் இந்தியாலில் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »