BREAKING NEWS
latest

Saturday, July 17, 2021

குவைத்தில் இந்தியர் மரணம் இயற்கை என்று பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தை உலுக்கிய இந்தியர் கொலையில் திருப்பம்;இயற்கை மரணம் என்று பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கை வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியர் மரணம் இயற்கை என்று பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத் நாட்டையே உலுக்கிய விநியோக தொழிலாளி(Delivery Boy) மரணத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அபுஃபத்திர பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இந்தியரான ஷேக் பாஷா(வயது-41) உயிரிழந்தது கொலை அல்ல என்று புதிய தடயவியல் அறிக்கை வெளிவந்துள்ளது. இறப்புக்கான காரணம் மாரடைப்பு எனவும் அதன் காரணமாக கீழே விழுந்த நிலையில் ஏற்பட்டதே தலை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட காயங்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் குவைத் குடிமகனின் வீட்டில் வைத்து நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட குவைத் இளைஞன் அளித்துள்ள வாக்குமூலத்தில் மயக்கமடைந்த அந்த நபரை தனது வீட்டின் முற்றத்தில் வைத்து எழுப்ப முயன்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரியவந்தது எனவும் , பயத்தில் தப்பி ஓடியதாக புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளான். மருத்துவ அறிக்கை வெளிவந்த நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள CCTV கேமராக்கள் காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அவருடைய வாக்குமூலத்துடன் காட்சிகள் ஒத்துபோவதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

அதே நேரம் கைது செய்யப்பட்ட இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்றும், பல வழக்குகளில் விசாரணைகளை சந்தித்து வருவதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதற்கிடையில், உள்ளூர் ஊடகங்கள் இரு தினங்களுக்கு முன்பு குற்றவாளி கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தடயவியல் அறிக்கை வெளியான நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்புமுனை கட்டத்தில் உள்ளது. இந்தியரான ஷேக் பாஷா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்லப்பட்டார். வாடிக்கையாளரான கைது செய்யப்பட்ட இளைஞன் 150 குவைத் தினார் மதிப்புள்ள டெலிவரி தொகையை செலுத்த மறுத்ததை தொடர்ந்து ஏற்பட்ட தகராறு, பாஷாவின் கொலையில் முடிந்ததாகவும்,இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார் எனவும் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் மரணம் இயற்கை என்று பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »