BREAKING NEWS
latest

Monday, July 12, 2021

குவைத்தில் 9 நாட்கள் பக்ரீத் விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

குவைத்தில் 9 நாட்கள் பக்ரீத் விடுமுறை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Image : KuwaitCity

குவைத்தில் 9 நாட்கள் பக்ரீத் விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

குவைத்தில் இந்த வருடத்திற்கான பக்ரீத் பண்டிகை விடுமுறை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு விடுமுறை தினங்களுக்கு இடையிலான ஜூலை-18 ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாக எடுத்துக்கொண்டு ஜூலை-16 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை- 24 சனிக்கிழமை வரை அனைத்து அரசு மற்றும் அரசின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களுக்கும் விடுமுறையாக இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.இதன் காரணமாக தொடர்ந்து 9 நாட்கள் பக்ரீத் விடுமுறையாக இருக்கும்.மேலும் வருகின்ற ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு மீண்டும் வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 9 நாட்கள் பக்ரீத் விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

« PREV
NEXT »