BREAKING NEWS
latest

Saturday, July 10, 2021

குவைத்தில் கொரோனா காரணமாக 2 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட 2 இந்தியர்கள் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த மஞ்சு மற்றும் அஜிகுமார்

குவைத்தில் கொரோனா காரணமாக 2 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் மக்களிடையே பரிஜியமான கலைத்துறை ஆர்வலரும், அப்பாசியா யுனைடெட் இந்தியன் பள்ளியின் ஆசிரியருமான மஞ்சு(வயது50) அவர்கள் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மஞ்சு கடந்த இரண்டு மாதங்களாக கோவிட் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இவருடைய கணவர் பெயர் பிரேம் சுகுமார் Industrial வங்கியின் ஊழியர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதேபோல் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு ஜஹரா மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று அஜிகுமார்(வயது-49) என்பவர் இன்று காலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். இவர் திருவல்லா, குன்னந்தானம் பகுதியை சேர்ந்தவர். KEO என்ற தனியார் நிறுவனத்தில் Senior Draft Man ஆக வேலை செய்து வந்தார். இவருக்கு ராஜி என்ற மனைவியும்,இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா காரணமாக 2 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »