BREAKING NEWS
latest

Thursday, June 10, 2021

அமீரகத்தில் கார் விபத்தில் காயமடைந்த ஐந்தாம் வகுப்பு இந்திய மாணவர் உயிரிழந்தார்

அமீரகத்தில் கார் விபத்தில் காயமடைந்த ஐந்தாம் வகுப்பு இந்திய மாணவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த மாணவன் அப்துல்லா

அமீரகத்தில் கார் விபத்தில் காயமடைந்த ஐந்தாம் வகுப்பு இந்திய மாணவர் உயிரிழந்தார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கார் விபத்தில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த ஐந்தாம் வகுப்பு இந்திய மாணவன் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த அப்துல்லா சமீர் காசி என்ற அந்த மாணவன் ஷார்ஜா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஆவார்.விபத்தில் காயமடைந்த அப்துல்லா ஷார்ஜாவில் உள்ள யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று புதன்கிழமை(09/06/21) மாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இந்த விபத்து கடந்த மே-24,2021 அன்று நடந்தது.பிளாட் தரை தளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாகனம் மோதியதில் மாணவன் பலத்த காயமடைந்தார். அப்துல்லா சமீர் காசியின் மறைவுக்கு ஷார்ஜா இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் கார் விபத்தில் காயமடைந்த ஐந்தாம் வகுப்பு இந்திய மாணவர் உயிரிழந்தார்

« PREV
NEXT »