BREAKING NEWS
latest

Monday, May 31, 2021

பாகிஸ்தானுக்கான விசா தடையினை குவைத் நீக்கியுள்ளதாக அறிவிப்பு

குவைத் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டினருக்கு வேலை விசாக்களை வழங்க அனுமதி வழங்கியுள்ளது

Image : இரு நாடுகளின் அமைச்சர்கள் சந்திப்பு

பாகிஸ்தானுக்கான விசா தடையினை குவைத் நீக்கியுள்ளதாக அறிவிப்பு

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினரும் இரண்டு நாள் பயணமாக குவைத் வந்துள்ளனர். அவர் குவைத் உள்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளின் அரசாங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடமிருந்து பெறப்பட்ட சிறப்பு செய்தியை குவைத் அமீரிடம் ஷேக் ரஷீத் வழங்குவார். குவைத் ஆனது கடந்த 2011 முதல் பாகிஸ்தான் நாட்டினருக்கு Work விசாக்களை வழங்குவதை நிறுத்திவைத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டினருக்கு குடும்ப, வணிக விசாக்கள் உட்பட பல்வேறு வகையான விசாக்கள் விரைவில் வழங்கப்படும் என்று குவைத் அறிவித்துள்ளது.

குவைத் தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, குவைத்துக்கான பாகிஸ்தான் தூதர் சையத் சஜாத் ஹைதர், பல்வேறு வகையான வேலை மற்றும் குடும்ப விசாக்களை பாகிஸ்தானியர்களுக்கு வழங்குவதை மீண்டும் தொடங்க குவைத் ஒப்புக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார். 2011 ஆம் ஆண்டு குவைத் பாகிஸ்தானுக்கு வேலை விசாக்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் பாகிஸ்தானின் தரப்பில் முந்தைய காலங்களில் பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வருகையின் போது குவைத் விசா தடையை நீக்கியதாக 2017 மார்ச் மாதத்தில் அப்போதைய அரசாங்கம் அறிவித்தது. இருப்பினும், முடிவு செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் மற்றும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குவைத் உள்துறை அமைச்சர் தமர் அலி சபா அல் சேலம் அல் சபா மற்றும் குவைத் பாகிஸ்தான் தூதர் சையத் சஞ்சத் ஹைதர் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான்-குவைத் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பரஸ்பர நலன்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது,மருத்துவ மற்றும் எண்ணெய் துறைகளில் தொழில்நுட்ப பிரிவு விசாக்களுக்கு எந்த தடையும் இல்லை, வளைகுடா நாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் இப்போது ஆன்லைன் விசாக்களுடன் குவைத் வரலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to பாகிஸ்தானுக்கான விசா தடையினை குவைத் நீக்கியுள்ளதாக அறிவிப்பு

« PREV
NEXT »