BREAKING NEWS
latest

Sunday, May 23, 2021

குவைத்தில் கொரோனா காரணமாக மற்றொரு இந்திய பெண் உயிரிழந்தார்

குவைத்தில் கொரோனா காரணமாக மற்றொரு இந்திய பெண் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த பிந்து

குவைத்தில் கொரோனா காரணமாக மற்றொரு இந்திய பெண் உயிரிழந்தார்

குவைத்தில் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த மற்றொரு இந்திய செவிலியர் இன்று(23/05/21) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் கேரளா மாநிலம்,கொல்லம், சன்னப்பட்டம் பகுதியை சேர்ந்த பிந்து என்பது தெரியவந்துள்ளது. கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக குவைத் சபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த பிந்து குவைத்தில் வீட்டு செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் பெயர் பிஜு,இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.அவரது உடல் சர்வதேச கொரோனா நெறிமுறைகளின்படி குவைத்தில் உள்ள சுலைபிகாத் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா காரணமாக மற்றொரு இந்திய பெண் உயிரிழந்தார்

« PREV
NEXT »