BREAKING NEWS
latest

Saturday, May 1, 2021

குவைத்தில் ஆசிரியராக வேலை பார்த்துவந்த இந்திய பெண் சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடைந்தார்

குவைத்தில் ஆசிரியராக வேலை பார்த்துவந்த இந்திய பெண் சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : மரணமடைந்த கதீஜா

குவைத்தில் ஆசிரியராக வேலை பார்த்துவந்த இந்திய பெண் சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடைந்தார்

குவைத்தில் சிகிச்சை பெற்று வந்த இந்திய ஆசிரியர் ஒருவர் சிகிச்சையில் இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்த ஆசிரியர் பெயர் கதீஜா ஜசீலா(வயது-31) என்பதும், இந்தியா,கேரளா மாநிலம் கோழிக்கோடு, வட்டோளி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது கடந்த சில நாட்களாக ஃபர்வானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. உயிரிழந்த கதீஜா அவர்களின் கணவர் பெயர் சபீஹ் ஆகும்.

இந்த தம்பதிகளுக்கு இஹ்சன் மற்றும் இஷால் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் உயிரிழந்த கதீஜா Indian Learners Academy School in Kuwait யில் ஆசிரியராக வேலை செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த கதீஜா அவர்களின் தந்தை வட்டோளி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உஸ்மான் ஆவார் மற்றும் தாய் கோழிக்கோடு மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஜமீலா என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ஆசிரியராக வேலை பார்த்துவந்த இந்திய பெண் சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடைந்தார்

« PREV
NEXT »