BREAKING NEWS
latest

Thursday, April 29, 2021

துபாயில் 5000 திர்ஹம் தொடர்பாக தொழிலாளர்கள் இடையே பயங்கர மோதல்;3 பலி மற்றும் 3 பேர் கவலைக்கிடம்

துபாயில் 5000 திர்ஹம் தொடர்பாக தொழிலாளர்கள் இடையே பயங்கர மோதல்;3 பலி மற்றும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

துபாயில் 5000 திர்ஹம் தொடர்பாக தொழிலாளர்கள் இடையே பயங்கர மோதல்;3 பலி மற்றும் 3 பேர் கவலைக்கிடம்

துபாயில் Naif பகுதியில் தொழிலிளர்கள் தங்கியிருந்த இடத்தில் 5000 திர்ஹம் தொடர்பாக முதலில் தொடங்கிய சண்டை பிறகு இரண்டு தரப்பினர் இடையே நடந்த பயங்கரமான மோதலாக மாறியது இதில் கத்தி, மரக்கட்டை உள்பட்ட பயங்கரமான ஆயுதங்கள் பயன்படுத்தி இரண்டு தரப்பினரும் பயங்கரமான மோதிக்கொண்டனர். இந்த பிரச்சனை தொடர்பான சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலிசார் கண்ட காட்சிகள் அவர்களை அதிர்ச்சி அடையசா செய்தது. 3 பேர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்,மேலும் 3 பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மோதலில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் ஆசியா நாட்டவர்கள் எனவும்,13 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் 10 பேரை அதாகாரிகள் கைது செய்தனர் எனவும் இந்த பிரச்சனை தொடர்பான தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன எனவும் Naif பகுதி காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.இதேபோன்ற பிரச்சனை தொடர்பான தகவல்கள் உங்களுக்கு தெரியவந்தால் 999 என்ற இலவசமான எண்ணில் உடனடியாக அழைக்க அதிகாரி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாயில் 5000 திர்ஹம் தொடர்பாக தொழிலாளர்கள் இடையே பயங்கர மோதல்;3 பலி மற்றும் 3 பேர் கவலைக்கிடம்

« PREV
NEXT »