BREAKING NEWS
latest

Tuesday, April 6, 2021

குவைத்தில் ரமலான் மாதத்திற்கான அரசு அலுவலகங்களின் வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் ரமலான் மாதத்திற்கான அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை சமூக விவகார அமைச்சகத்தின் துணை செயலாளர் வெளியிட்டார்

குவைத்தில் ரமலான் மாதத்திற்கான அரசு அலுவலகங்களின் வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் ரமலான் மாதத்தில் அரசு அலுவலகங்களின் வேலை நேரம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலாக இருக்கும். இது தொடர்பாக சமூக விவகார அமைச்சகத்தின் துணை செயலாளர் முசல்லம் அல் சுபாய் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். கோவிட் பரவல் தினசரி அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் சுகாதார பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப மேல் குறிப்பிட்ட புதிய கால அட்டவணை ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் ரமலான் முடியும் வரையில் அமல்படுத்தப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தெரிவித்துள்ளார்.

இது போல் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் ரமலான் மாதத்திற்கான வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைத்து சுற்றறிக்கை மூலம் ரமலான் மாதத்திற்கானபுதிய கால அட்டவணையினை வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ரமலான் மாதத்திற்கான அரசு அலுவலகங்களின் வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »