BREAKING NEWS
latest

Thursday, April 8, 2021

ஓமானில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய இளைஞர் உயிரிழந்தார்

சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி;ஓமானுக்கு மனைவியும் குழந்தையும் வந்த ஒரேவாரத்தில் உயிரிழந்த சோகம்

Image: உயிரிழந்த அஜின்பாபு(வயது-32)

ஓமானில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய இளைஞர் உயிரிழந்தார்

ஓமானில் கார் விபத்தில் இந்தியா,கேரளா மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் அஜின் பாபு(வயது-32), இவர் சலாலாவின் மசூனாவில் வைத்து நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சலாலா சுல்தான் கபூஸ் மருத்துவமனையில் அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. உடலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த அஜினின் நண்பர்கள் தெரிவித்தனர். அவருடைய மனைவி மெரின் மற்றும் ஒன்றரை வயது குழந்தையான இவானும் முதல் முறையாக சலாலாவுக்கு வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த துயரமான விபத்தில் அவர் உயிரிழந்த செய்தி அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய இளைஞர் உயிரிழந்தார்

« PREV
NEXT »