BREAKING NEWS
latest

Thursday, April 8, 2021

குவைத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர் உடல் இன்று தாயகம் செல்கிறது

குவைத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர் உடல் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இன்று தாயகம் செல்கிறது

Image: உயிரிழந்த முருகையன்(வயது-49)

குவைத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர் உடல் இன்று தாயகம் செல்கிறது

குவைத்தில் வேலை செய்து வந்தவர் இந்தியா,தமிழகம்,திருவாரூர் மாவட்டம்,கீழ்வேளூர், போக்கிதெரு பகுதியை சேர்ந்த முருகையன்(வயது-49), இவருடைய தந்தை பெயர் பாலகிருஷ்ணன் என்பதாகும். முருகையன் அவர்கள் வாகன ஓட்டுனராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த பெப்ரவரி-12(வெள்ளிக்கிழமை) அன்று ரிக்கை பகுதியில் தனது வாகனத்தில் வைத்து தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்று செய்தியில் தெரிவிக்பட்டுள்ளது.

தொடர்ந்து இவருடைய மரணம் குறித்த மருத்துவ மற்றும் விசாரணை அறிக்கைகள் வெளியாக சற்று தாமதமான நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் முடிந்து ஆவணங்கள் கடந்த 4/4/2021 அன்று தான் கிடைக்க பெற்றது எனவும், அதை தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு அவரது உடலை தாயகம் அனுப்பும் அனைத்து வேலைகளையும் குவைத் மக்கள் சேவை மையம் நிர்வாகிகள் முடித்தனர் எனவும். இதையடுத்து இன்று(வியாழக்கிழமை) 08/04/21 மதியம் 1:30 மணிக்கு ஏர்-இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் உடல் தாயகம் எடுத்து செல்லப்படுகிறது எனவும்,இரவு 9:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடையும் அவரது உடல் அங்கிருந்து, இலவச அவசர ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லபட்டு நல்லடக்கம் செய்யப்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர் உடல் இன்று தாயகம் செல்கிறது

« PREV
NEXT »