BREAKING NEWS
latest

Monday, April 12, 2021

குவைத்தில் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் உயிரிழந்தார்

குவைத்தில் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த அபிலாஷ்

குவைத்தில் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் உயிரிழந்தார்

குவைத்தில் வேலை செய்துவந்த இந்தியா,கேரளா மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(வயது-40) அவர்கள் கொரோனா காரணமாக அமிரி மருத்துவமனையில் கடந்த சில நாட்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் நேற்று(11/04/21) ஞாயிற்றுக்கிழமை மாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். எம்.டெக் பட்டதாரி அபிலாஷ் குவைத்தில் நெட்வொர்க்கிங் பொறியாளராக பணிபுரிந்து வந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவருக்கு தீப்தி என்ற மனைவியும் டேனியல்,டேவிட் என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது. அபிலாஷ் குடும்பத்துடன் குவைத்தில் வசித்து வருகின்ற நிலையில் இந்திய துயரமான சம்பவம் நடந்துள்ளது. கோவிட் நெறிமுறையின்படி இன்று(12/04/21) திங்கள்கிழமை மதியம் 1.30 மணிக்கு குவைத்தில் உள்ள சுலைபிகாட் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் உயிரிழந்தார்

« PREV
NEXT »