BREAKING NEWS
latest

Saturday, March 20, 2021

ஓமானில் இருந்து டெல்லிக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி போலியானது;விமான நிறுவனம் விளக்கம்

ஓமானில் இருந்து டெல்லிக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி போலியானது;விமான நிறுவனம் இது தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது

Image credit: Oman Airways

ஓமானில் இருந்து டெல்லிக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி போலியானது;விமான நிறுவனம் விளக்கம்

டெல்லிக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்று ஓமான் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி சமூக ஊடகங்களில்,மஸ்கட்டில் இருந்து டெல்லிக்கும் மற்றும் டெல்லியில் இருந்து மஸ்கட் க்கும் செல்லும் அனைத்து விமானங்களும் இந்த மாதம் 19 முதல் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டெல்லிக்கு அனைத்து விமானச் சேவைகளும் திட்டமிட்டபடி இயங்குவதாகவும், இடையூறு எதுவும் ஏற்படாது என்றும் ஓமான் ஏர் நிறுவனம் தங்களின் அதிகாரபூர்வ ஊடகங்கள் வழியாக இந்த போலியான செய்திக்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.விமான சேவைகள் பற்றிய தகவல்களுக்கு மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் பார்க்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கோவிடின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளை ஓமான் கடுமையாக்கியதைத் தொடர்ந்து இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் லண்டன் செல்லும் விமானங்களை ஓமான் ஏர் விமான நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"லண்டன் விமான சேவை நிறுத்தியதை சிலர் டெல்லி சேவை நிறுத்தப் பட்டதாக சமுக ஊடகங்களில் பரப்பி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் இருந்து டெல்லிக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி போலியானது;விமான நிறுவனம் விளக்கம்

« PREV
NEXT »