BREAKING NEWS
latest

Friday, March 5, 2021

துபாயில் சிறுமியின் உயிரை காப்பாற்ற சிகிச்சைக்காக ஆட்சியாளர் 8 மில்லியன் திர்ஹாம் செலுத்தியுள்ளார்

துபாயில் சிறுமியின் உயிரை காப்பாற்ற சிகிச்சைக்காக ஆட்சியாளர் 8 மில்லியன் திர்ஹாம் செலுத்தியுள்ளார் என்ற நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : துபாய் ஆட்சியாளர் மற்றும் குழந்தை

துபாயில் சிறுமியின் உயிரை காப்பாற்ற சிகிச்சைக்காக ஆட்சியாளர் 8 மில்லியன் திர்ஹாம் செலுத்தியுள்ளார்

துபாயில் நேற்று(04/03/21 ) வியாழக்கிழமை அரிய வகையான நோயினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய பச்சிளம் குழந்தைக்கு மரபணு சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. முன்னர், துபாய் ஆட்சியாளர் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தேவையான 8 மில்லியன் திர்ஹம் சிகிச்சைக்காக பணத்தை தன்னுடைய சொந்த சேமிப்பில் இருந்து அளிப்பதாக தனிப்பட்ட முறையில் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரியில், சிறுமியின் தந்தை, இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி மசார் மொண்டர் ஆகியோர் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோ மூலம் ஒரு வேண்டுகோளை சமூக ஊடகங்கள் மூலம் விடுத்தனர்.அதில் Spinal Muscular Dystrophy (SMA) என அழைக்கப்படும் அரிய மற்றும் தீவிரமாக நோயினால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகளுக்கு சிகிச்சைக்காக 8 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள Survival Motor Neuron 1(SMN1) என்ற நரம்பு வழியாக செலுத்தப்படும் ஒரு முறை ஊசி மூலமான சிகிச்சைக்கு செலவாகிறது என்று வேண்டுக்கோள் விடுத்து காணோளி வெளியிட்டு இருந்தனர்.

இதையடுத்து ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உலகின் மிக விலையுயர்ந்த சிகிச்சையாக ஒற்றை ஊசி போடுவதற்காக வேண்டுகோளை விடுத்துள்ள செய்தி அறிந்த அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், சிகிச்சைக்காக 8 மில்லியன் திர்ஹம் நன்கொடையாக அளித்தார். துபாயில் உள்ள அல் ஜலீலா குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் குழந்தை லவீனுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது தொடர்பாக குழந்தையின் தந்தை இப்ராஹிம் கூறுகையில் லவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் எல்லா குழந்தைகளை போல சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை லவீன் பெற்றிருப்பதாகவும், கடவுள் ஒருபோதும் நம்மைத் தனியாக விடமாட்டான் என்றும்,ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள் தன்னுடைய குழந்தையின் வாழ்க்கையை கடவுளின் வடிவத்தில் திருப்பித் தந்தார் என்றும் தான் எப்போதும் நம்புவதாகவும் அவரு கூறினார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாயில் சிறுமியின் உயிரை காப்பாற்ற சிகிச்சைக்காக ஆட்சியாளர் 8 மில்லியன் திர்ஹாம் செலுத்தியுள்ளார்

« PREV
NEXT »