BREAKING NEWS
latest

Saturday, March 27, 2021

குவைத்தில் பல இடங்களிலும் கடந்த சில மணிநேரங்களாக இணைய வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

குவைத்தில் பல இடங்களிலும் கடந்த சில மணிநேரங்களாக இணைய வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது;விரைவில் பிரச்சனை சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் பல இடங்களிலும் கடந்த சில மணிநேரங்களாக இணைய வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

குவைத்தில் பல இடங்களிலும் இன்று கடந்த சில மணிநேரங்களாக இண்டர்நெட் வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் இண்டர்நெட் தடைபட்டுள்ளது, அதே நேரத்தில் பல இடங்களில் மிகவும் குறைந்த வேகத்தில் இண்டர்நெட்டின் சேவை இயக்கத்தில் உள்ளது. இண்டர்நெட் வசதியினை பகிர்வு செய்யும் சர்வதேச இன்டர்நேட் பகிரங்கமான கேபிளில் ஏற்பட்ட பழு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தடங்கலுக்கு வருந்துவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் முக்கிய தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பல இடங்களிலும் கடந்த சில மணிநேரங்களாக இணைய வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

« PREV
NEXT »