BREAKING NEWS
latest

Tuesday, March 23, 2021

ஓமானுக்கு அடுத்த வாரம் முதல் வருகின்ற பயணிகளுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றங்கள் அறிவிப்பு

ஓமானுக்கு அடுத்த வாரம் முதல் வருகின்ற பயணிகளுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றங்கள் அறிவிப்பு;சஹாலா(Sahala Platform) தளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும்

Image: Oman Airport

ஓமானுக்கு அடுத்த வாரம் முதல் வருகின்ற பயணிகளுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றங்கள் அறிவிப்பு

ஓமானுக்கு அடுத்த வாரம் முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதவாது மார்ச்-29 ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் நாட்டிற்கு வருபவர்கள் சஹாலா(Sahala Platform) தளம் வழியாக தங்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலை(Institutional Quarantine) முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஓமான் சிவில் ஏவியேஷன் ஆணையம்(CAA) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"சஹாலா' மூலம் நிறுவன தனிமைப்படுத்தலைப் பதிவு செய்ய பயணிகள் https://covid19.emushrif.om என்ற இணைய தளத்தை பார்வையிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்காக பயணிகள் முன்பதிவு செய்துள்ளதை உறுதி செய்வது பயணிகளை அழைத்து வருகின்ற விமான நிறுவனங்களின் பொறுப்பாகும் என்று சிவில் ஏவியேஷன் ஆணையம்(CAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் தனிமைப்படுத்தல் தொடர்பாக நடைமுறையிலுள்ள பிற நிபந்தனைகளும் அப்படியே பின்பற்ற வேண்டும் எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானுக்கு அடுத்த வாரம் முதல் வருகின்ற பயணிகளுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றங்கள் அறிவிப்பு

« PREV
NEXT »