BREAKING NEWS
latest

Monday, February 15, 2021

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற பெரும் துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தின் Sabah Al-Nasser பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அறையில் குளிருக்காக கரி பயன்படுத்தியதால் எதிர்பாராதவிதமாக இரண்டு வீட்டுப் பணிப்பெண்கள் இன்று(15/02/21) உயிரிழந்தனர் என்ற பெரும் துயரமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பணிப்பெண்கள் பிலிப்பைன்ஸ்(வயது-46) மற்றும் இலங்கை(வயது-51) நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஸ்பான்சர்(அரபி) கூறுகையில் பணிப்பெண்கள் தங்கியிருந்த அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராத காரணத்தால் ஒருமுறைக்கு பலமுறை கதவைத் தட்டினார் எனவும் எந்த பதிலும்வராத காரணத்தால். சந்தேகமடைந்து வீட்டில் உள்ள மற்றவர்கள் உதவியுடன் கதவை உடைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பணிப்பெண்கள் ஏற்கனவே இறந்துவிட்டதை கண்டார் எனவும், பின்னர் அவர் இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து விரைந்து வந்த தடயவியல் அதாகாரிகள் மரணத்திற்கான காரணம் தொடர்பான ஆய்வு செய்ததில் மூடிய அறையில் நிலக்கரியை எரிந்ததால் அதிலிருந்து எழுந்த கார்பன் டை ஆக்சைடு மூலம் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

« PREV
NEXT »