BREAKING NEWS
latest

Thursday, February 4, 2021

இன்று உலக புற்றுநோய் தினம் ,குவைத் செவிலியர் சிறப்பு கட்டுரை

இன்று உலக புற்றுநோய் தினம்;குவைத் செவிலியர் அவர்கள் வளைகுடா மக்கள் நலன்கருதி வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரை தொகுப்பு

இன்று உலக புற்றுநோய் தினம் ,விழிப்புணர்வு நாள்;குவைத் செவிலியர் சிறப்பு கட்டுரை

இன்று உலக புற்றுநோய் தினம்.பழைய காலங்களில் அரிதாக அறியப்பட்ட புற்றுநோய் இன்று அதிகமானதற்கு காரணம் நம்முடைய உணவுப்பழக்கங்களும்,இயற்கைமாசுபட்டதும்,சிலசமயம் புகைப்பிடித்தல்,மது அருந்துதல்,புகையிலை உபயோகப்படுத்துதல்,பாரம்பரியம் என பலவற்றை கூறினாலும் இவைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறலாமே தவிர இது தான் காரணம் என சரியாக வரையறுத்துக் கூற முடியாது.இப்போதைய அறிவியல் வளர்ச்சி மற்றும் மருத்துவ வளர்ச்சி காரணமாக வேகமாக கண்டுபிடிப்பதன் மூலம் பாதிப்புகளையும் உயிரிழப்பையும் தவிர்க்கலாம்... அறிகுறிகள்(CAUTION)

  1. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்,சிறுநீர் பிரச்சனைகள் இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துதல்.
  2. புண் ஆறாமல் இருத்தல்.
  3.  அசாதாரணமான இரத்தப்போக்கு (காயம் இல்லாமலே சிலசமயம் இரத்தம் வருதல்)
  4. கட்டி மார்பகத்திலோ அல்லது உடலின் எதாவது பகுதியிலோ வருதல்.வலி(அ)வலியில்லாத கட்டி.
  5. செரிமானமின்மை.
  6. மச்சம் அல்லது மருவில் மாற்றம் ஏற்படுதல்.
  7. அசாதாரணமான இருமல்(அ)குரலில் மாற்றம் ஏற்படுத்துதல்.

இவைகளில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.பெண்கள் சுயமார்பக பரிசோதனை 35 வயதிற்கு மேல் செய்து கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், புகையிலை,போதை மருந்து பழக்கங்களை தவிர்க்க வேண்டும். மண்பானையில் சமைத்த உணவை உட்கொள்வது நல்லது. சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். விரைவாக கண்டுபிடித்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். பாதியிலேயே வேறு சிகிச்சைக்கு மாறுவதோ அல்லது இடையில் நிறுத்துதலோ கூடாது. நம்முடைய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது எந்த வயதிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சீக்கிரம் கண்டுபிடித்த பலரும் பரவுதலை தடுத்து பல காலம் வாழ்கின்றனர். புற்றுநோய் தடுப்போம். வந்தாலும் விரைவாக கண்டுபிடித்து பலகாலம் வாழ்வோம்.

Article க.நிர்மலா தமிழரசன்( குவைத் செவியர்)

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இன்று உலக புற்றுநோய் தினம் ,குவைத் செவிலியர் சிறப்பு கட்டுரை

« PREV
NEXT »