BREAKING NEWS
latest

Tuesday, February 23, 2021

குவைத்தில் தேசிய தினத்தில் எந்தவிதமான கொண்டாட்டத்திற்கும் அனுமதி இல்லை அதிகாரி தகவல்

குவைத்தில் தேசிய தினத்தில் எந்தவிதமான கொண்டாட்டத்திற்கும் அனுமதி இல்லை அதிகாரி தகவல்;வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Image : அதிகாரி ஃபராஜ் அல் சோபி

குவைத்தில் தேசிய தினத்தில் எந்தவிதமான கொண்டாட்டத்திற்கும் அனுமதி இல்லை அதிகாரி தகவல்

குவைத் காவல்துறை அதிகாரி மேஜர் ஜெனரல் ஃபராஜ் அல் சோபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய விடுமுறை நாட்களில் கொண்டாட்டம் தொடர்பான எந்தவொரு கூட்டத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாட்டில் இந்த நாட்களில் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், எந்தவொரு கூட்டம் நடைபெற விடாதபடி கண்காணிக்கவும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாதுகாப்பு துறை இயக்குநர்களுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் மீறப்பட்டு Gulf Street உட்பட நாட்டில் எந்தவொரு இடத்திலும் நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்து அதில் கலந்துந்கொண்ட நபர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவார்கள் எனவும், அவர்களுக்கு எதிராக அந்தந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தேசிய தினத்தில் எந்தவிதமான கொண்டாட்டத்திற்கும் அனுமதி இல்லை அதிகாரி தகவல்

« PREV
NEXT »