BREAKING NEWS
latest

Friday, February 19, 2021

குவைத்தில் 35-வயதான இந்திய இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்

குவைத்தில் 35-வயதான இந்திய இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த தேவசியா(வயது-35)

குவைத்தில் 35-வயதான இந்திய இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்

குவைத்தில் இளைஞர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் இந்தியா,கேரளா மாநிலம் திருச்சூர்,முல்லக்கரை பகுதியை சேர்ந்த பிண்டோ தேவசியா(வயது-35) என்பது தெரியவந்துள்ளது. இவர் Commercial Bank of Kuwait(Bank in Al-Dajeej) ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருடைய உடல் மேல் நடவடிக்கைக்காக Dajeej சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி லிமா குவைத்தின் அல் சபா மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராக சேவையாற்றி வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயது மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் அப்பாசியாவில் வசித்து வந்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 35-வயதான இந்திய இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்

« PREV
NEXT »