BREAKING NEWS
latest

Friday, January 8, 2021

குவைத்தில் டேங்கர் லாரி வெடித்து பயங்கரமான விபத்து; 2 பேர் உயிரிழந்தனர்


(விபத்தில் சிக்கிய லாரி இதுதான்)

குவைத்தின் சுவைக்(Shuwaikh Industrial Area) தொழில்துறை பகுதியில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து சிதறிய பயங்கரமான விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர், மற்றொருவர் படுகாயமடைந்தார்.நேற்று இரவு இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான குவைத் தீயணைப்பு துறையின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வியாழக்கிழமை மாலை எண்ணெய் டேங்கர் வெடித்து சிதறிய பயங்கரமான விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்றாவது நபர் படுகாயமடைந்ததாகவும் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த கூடுதலாக தகவல்கள் தெரியவில்லை.

மேலும் ஷுவைக் தொழில்துறை பகுதியில் நடந்த விபத்தில் லாரி பயங்கரமான வெடித்ததில் சுமார் 30 மீட்டர் நகர்ந்து பாலத்துடன் மோதியது எனவும்,தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும், இந்த விபத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடைய அங்குள்ள பட்டறையில் விபத்தில் சிக்கிய டேங்கரில் வெல்டிங் சம்பந்தப்பட்ட வேலைகள் நடைபெற்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

Two Killed | Tanker Explosion | Shuwaikh Area
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் டேங்கர் லாரி வெடித்து பயங்கரமான விபத்து; 2 பேர் உயிரிழந்தனர்

« PREV
NEXT »