BREAKING NEWS
latest

Saturday, January 30, 2021

சவுதி அரேபியாவிற்கான ச‌ர்வதேச விமானங்களின் நேரடி சேவைகள் துவக்குவதை மே-17 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது

சவுதி அரேபியாவிற்கான சர்வதேச விமானங்களின் நேரடி சேவைகள் துவக்குவதை மே-17 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது;இது தொடர்பான செய்தி மாலையில் வெளியாகியுள்ளது

Image : Saudi Airport

சவுதி அரேபியாவிற்கான சர்வதேச விமானங்களின் நேரடி சேவைகள் துவக்குவதை மே-17 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது

சவுதி அரேபியாவிலிருந்து சர்வதேச விமானங்களின் நேரடியான சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கான தேதியை இன்று மாலையில் திடிரென மீண்டும் நீட்டிப்பு செய்து உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, வெளிநாடுகளுக்கு வழக்கமான விமானங்கள் சேவையானது மே-17,2021 முதல் தொடங்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக சர்வதேச விமான சேவைகள் வருகின்ற மார்ச் 31 இரவு முதல் துவக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக காரணமாக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்ற கோவிட் வைரஸ் அதிக அளவில் தற்போது பரவி வருகின்றன எனவும், பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள கொரோன தடுப்பூசி நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக முதல் டோஸ் மருந்து எடுக்கொண்ட பலருக்கு இரண்டாவது டோஸ் எடுப்பதாக தேதி மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கடந்த சில நாட்களாக நாட்டில், கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு புதிதாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்குவதால் கொரோனா பாதிப்பு உயரும் என்பது உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. மேலும் மே-17,2021 மதியம் 1 மணி முதல் இந்த தடை நீக்கப்படும் என்பது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் சவுதியில் நுழைய ஒரே வழி துபாய், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் 14 நாட்கள் தங்கியிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழ் பெற்று,சவுதி அறிவித்துள்ள சுகாதார விதிமுறைகள் பின்பற்றி நாட்டில் நுழைவதே. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேரடியாக சவுதியில் நுழைய தற்போதைய நிலைமையில் மே-17 வரையில் காத்திருந்த வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதி அரேபியாவிற்கான ச‌ர்வதேச விமானங்களின் நேரடி சேவைகள் துவக்குவதை மே-17 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது

« PREV
NEXT »