BREAKING NEWS
latest

Saturday, January 9, 2021

சவுதியில் கள்ளச்சாராய உற்பத்தி;இரண்டு இடங்களில் நடத்திய சோதனையில் இந்தியர்கள் உள்பட பலர் கைது



சவுதியில் இரகசிய தகவல் அடிப்படையில் இரண்டு வெவ்வேறான இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 39 பீப்பாய்கள் உற்பத்திக்கான தயார் நிலையில் இருக்க கள்ளச்சாராய கலவைகள், விநியோகத்திற்காக தயார் நிலையில் இருந்த கள்ளச்சாராயம் நிரப்பப்பட்ட பாட்டில்கள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளிடவையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் சவுதி அரேபியாவில் அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து அதிக அளவில் மதுபானம் உற்பத்தி செய்து விநியோகித்த இரண்டு இந்தியர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர், இதுபோல் மூன்று எத்தியோப்பியர்கள் உட்பட மற்றொரு மதுபான உற்பத்தி கும்பலையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இவர்கள் சவுதியின்  மன்ஹுஹா மற்றும் அலையர்மூக் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருந்து  மதுபான உற்பத்தியினை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக ரியாத் போலீசார் தெரிவித்தனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் கள்ளச்சாராய உற்பத்தி;இரண்டு இடங்களில் நடத்திய சோதனையில் இந்தியர்கள் உள்பட பலர் கைது

« PREV
NEXT »