BREAKING NEWS
latest

Sunday, January 24, 2021

குவைத் திருப்புவதற்காக விமான நிலையம் புறப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தனர்

குவைத் திருப்புவதற்காக விமான நிலையம் புறப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தனர்;இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ,500 பிளாட் பகுதியை சேர்ந்தவர்கள்

குவைத் திருப்புவதற்காக விமான நிலையம் புறப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தனர்

இந்தியா,தமிழகம், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ,500 பிளாட் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் மற்றும் ஓட்டுநர் உட்பட மொத்தமாக 6 பேர் இன்று(24/01/2021) காலை குவைத் திரும்புவதற்காக மதுரை விமான நிலையம் நோக்கி ஆம்னி வேன் ஒன்றில் புறப்பட்டனர். அந்த வானத்தில் ஹாஜா ஷாகுல் ஹமீது (வயது-52), மாமியார் ஷாஜகான் பிவீ (வயது-60) அவரது மனைவி ரூபினா, மகள் ரஹ்மத் பாத்திமா, மகன் இனாஸ் ஆகிய 5 பேரும் வேனில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். கீழக்கரையை சேர்ந்த அகமது ஹசன்(வயது-30)என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தார் என்று கூறப்படுகிறது. சத்திரக்குடி, தபால் சாவடி அருகே வந்தபோது எதிரே கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த டெம்போ டிராவலர் வேனுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆம்னி வேன் முழுவதுமாக உருக்குலைந்து போனது, இந்த துயரமான விபத்தில் ஹாஜா சாகுல் ஹமீது, இவரது மாமியார் ஷாஜகான் பீவி, டிரைவர் அகமது ஹசன் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி ரூபினா, மகள் ரஹ்மத் நிஷா, மகன் இனாஸ் ஆகியோரும் மற்றும் கர்நாடக வேனில் வந்த 3 பேரும் காயமடைந்தனர் இதையடுத்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் 6 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் திருப்புவதற்காக விமான நிலையம் புறப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தனர்

« PREV
NEXT »