BREAKING NEWS
latest

Tuesday, January 5, 2021

கத்தார், சவுதி 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இன்று மாலை முதல் நாட்டின் எல்லைகளை திறந்துள்ளது

நான்கு ஆண்டுகால நெருக்கடிக்குப் பின்னர், சவுதி, கத்தார் நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளைத் திறக்க முடிவு செய்துள்ளன.இந்த அறிவிப்பை குவைத் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டார். இதன் மூலம் கத்தாருடனான நிலம், கடற்படை மற்றும் விமான எல்லைகள் மாலை முதல் திறக்கப்பட்டன,இது தொடர்பாக இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

கருத்து வேறுபாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜெரார்ட் குஷ்னரின் வருகைக்குப் பின்னர் இந்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை ஜி.சி.சி உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிவிப்பு இரு பிராந்தியத்தில் உள்ள மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டில், சவுதி, பஹ்ரைன், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகியவை கத்தார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பிறகு பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. இவை அனைத்தையும் கத்தார் நிராகரித்தது, இதை தொடர்ந்து எல்லைகள் மூடப்பட்டன. இதையடுத்து கத்தார் தங்கள் நாட்டின் நெருக்கடியை சமாளிக்க சொந்தமாக முயற்சிகளை தொடங்கியது. இந்த புதிய நடவடிக்கை, நிலுவையிலுள்ள குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் நாடுகளுக்கு இடையிலான அமைதியைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது என்றல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலுவையிலுள்ள கத்தார் மீதான குற்றச்சாட்டுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை. அமெரிக்க அதிபராக ஜோபிடன் பதவியேற்பதற்கு முன்பு பிரச்சினை தீர்க்கப்படும் என்று டிரம்ப் சூசகமாக முன்னர் தெரிவித்திருந்தார். சவுதி அரேபியாவில் நாளை நடைபெறும் ஜி.சி.சி உச்சி மாநாட்டிற்கு முன்னதாக கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகியவை இந்த பிரச்சினையில் இன்னும் தடையை நீக்கவில்லை.

இந்த புதிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் இப்போது சவுதி பட்டத்து இளவரசரால் தொடங்கப்படுகின்றன. தடையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது முடிவுக்காக முக்கிய காரணம் வளைகுடா நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஒற்றுமை அவசியம் என்று சவுதி பட்டத்து இளவரசர் கூறினார். இதன் மூலம், நாளைய உச்சி மாநாடு மீண்டும் உலக கவனத்தை ஈர்க்கும்.

சவுதி அரேபியாவைத் தவிர, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஜி.சி.சி உறுப்பு நாடுகள் ஆகும். கத்தார் ஆமீர் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட 2017 முதல் ஜி.சி.சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. நாளைய உச்சி மாநாடு அல் உலயாவில் உள்ள மராயா ஆடிட்டோரியத்தில் நடைபெறும். இந்த கட்டிடம் கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய கண்ணாடி கட்டிடமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 500 பேர் அமர முடியும்.  இந்த உச்சிமாநாட்டில் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.குவைத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to கத்தார், சவுதி 4 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இன்று மாலை முதல் நாட்டின் எல்லைகளை திறந்துள்ளது

« PREV
NEXT »