BREAKING NEWS
latest

Monday, January 11, 2021

குவைத்தில் நகை மற்றும் பணம் திருடியதாக இரண்டு வீட்டுப் பணிப்பெண்களை காவ‌ல்துறை தேடிவருகின்றனர்


குவைத்தில் உள்ள ஒரு ஸ்பான்சர் வீட்டில் இருந்து நகைகளைத் திருடிய இரண்டு வீட்டுப் பணிப்பெண்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் 4,000 தினார்கள் பணம் மற்றும் 3,000 தினார்கள் மதிப்புள்ள நகைகளையும் திருடிச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமையாளரின் மகளின் திருமணத்திற்காக வாங்கிய நகைகள் அவரது மனைவியின் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தது தெரிந்த இருவரும் அதை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியேற குற்றம் சாட்டப்பட்ட இருவரின் மொபைல் போன்களும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கமால் இருக்க அணைத்து வைத்துள்ளனர் எனவும்,இருப்பினும், இருவருக்கும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தேடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் எந்த நாட்டவர்கள் என்பது தொடர்பாக தகவல்கள் தெரியவில்லை. 


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நகை மற்றும் பணம் திருடியதாக இரண்டு வீட்டுப் பணிப்பெண்களை காவ‌ல்துறை தேடிவருகின்றனர்

« PREV
NEXT »