BREAKING NEWS
latest

Saturday, January 23, 2021

குவைத்தில் தற்போதைய குளிர் பிப்ரவரி வரையில் தொடரும் பிரபல வானியலாளர் அறிவிப்பு

குவைத்தில் தற்போதைய குளிர் பிப்ரவரி வரையில் தொடரும் பிரபல வானியலாளர் அறிவிப்பு;இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நாட்டில் குளிர் நிலவத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்

குவைத்தில் தற்போதைய குளிர் பிப்ரவரி வரையில் தொடரும் பிரபல வானியலாளர் அறிவிப்பு

குவைத்தில் தற்போது நிலவும் கடுமையான குளிர் பிப்ரவரி வரை தொடரும் என்று வானியலாளர் பிரபல ஆதல்-அல்-ஸாதுன் தெரிவித்துள்ளார். வழக்கமாக ஜனவரி 24- ஆம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நீடிக்கும் குளிர்,இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நாட்டில் நிலவத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.குவைத் குடிமக்களிடையே 'குளிர்கால நீலம்' என்று அழைக்கப்படும் இந்த காலநிலை முகம் மற்றும் கை கால்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது என்றார், தற்போது நாட்டில் நிலவியுள்ள குளிர் சமீபத்திய ஆண்டுகளில் பதிவாகியுள்ள மிகவும் குறைந்த வெப்பநிலை எனவும் அவர் விளக்கியுள்ளார்.

கால்நடைகள் மற்றும் ஒட்டகங்களின் மூக்குகளின் வழியாக இரத்தப்போக்கு ஏற்படுவது இந்த காலநிலையின் ஒரு முக்கியமான அம்சமாகும், என்று அவர் கூறினார். மிதமான வேகத்துடன் வடமேற்கு காற்று வீசுவதும் சில நேரங்களில் காஸ்பியன் கடலில் உருவாகும் அதிக அடர்த்தியான காற்று குவைத் உட்பட அரேபிய தீபகற்பத்தின் சில பகுதிகளில் குளிர் அதிகரித்து வருவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இரவு வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அல்லது பூஜ்ஜிய டிகிரிக்கும் கீழ் வரையில் குறையும் எனவும், இந்த நாட்களில் மிகவும் பாதிக்கப்படுவது நாட்டின் பாலைவனப் பகுதிகள் மற்றும் விவசாய பகுதிகள் என்றும்,இங்கு சில நேரங்களில் குளிர் உறைபனி வரையில் நிலவும் என்றும் ஸாதுன் அவர் தெரிவித்துள்ளார்.

Kuwait Weather | Adel Astronomer | Kuwait People

Add your comments to குவைத்தில் தற்போதைய குளிர் பிப்ரவரி வரையில் தொடரும் பிரபல வானியலாளர் அறிவிப்பு

« PREV
NEXT »