BREAKING NEWS
latest

Saturday, January 2, 2021

குவைத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தினசரி அறிக்கை....

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(02/01/21) வெளியிடப்பட்ட அறிக்கையில் பகல் நேரங்களில் மிதமான வானிலை நிலவும் எனவும், வானத்தின் தெரிவுநிலை படிப்படியாக மேம்படும் மற்றும் காற்று லேசாக மணிக்கு 08-20 கிமீ வேகத்தில் இருக்கும், சில மேகமூட்டமும் எனவும் தெரிவித்துள்ளது.

இரவைப் பொறுத்தவரை குளிர் காலநிலை நிலவும், காற்று மணிக்கு 08-22 கிமீ வேகத்தில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும், சில பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்புடன், அங்கங்கே சில சிதறிய மேகங்கள் தோன்றும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப பகல் நேரத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 21 டிகிரி முதல் இரவில் 11 டிகிரி வரையில் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தினசரி அறிக்கை....

« PREV
NEXT »